தமிழ்நாட்டில் கோயில்களுக்கு ஒரு கால பூஜைக்காக ரூபாய் 129 கோடி, அரசால் வழங்கப்படுகிறது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், வட ஒத்தவடை வீதி, வந்தவாசி,
செய்யாறு மற்றும் போளூர் இந்து சமய அறநிலைய துறை சார்பில், செயல்பட்டு வரும்
கோயில்களில் அறங்காவலர் இல்லாத நிலை இருந்தது. மேலும், மாவட்ட ஆட்சியர் முருகேஸ், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை உள்ளிட்ட, அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக கோயிலில் அறங்காவலர்களை நியமிக்கும் ஆய்வு, மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று காந்தி நகர் புற வழி சாலையில் உள்ள நகராட்சி மைதானத்தில், அறங்காவலர்களுக்கு நியமனம் வழங்கும் விழாவில் அமைச்சர் ஏவ.வேலு 452 கோயிலுக்கு, 748 பரம்பரை முறையில் வழி சாரா அறங்காவலர்கள் ஆணையை வழங்கினார்.
அப்போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:
தமிழ்நாட்டில் ஒரு கால பூஜைக்காக ரூபாய் 129 கோடி தமிழ்நாடு அரசால் கொடுக்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கு நல திட்டங்களும், 788 கோயில்களுக்கு குடமுழுக்கும் செய்யப்பட்டுள்ளது. பெண்கள்
ஓதுவராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கிராமப்புறங்களில் உள்ள 2600
கோயில்களில் பணியாற்றும் 860 பூசாரிகளுக்கு, ரூபாய் 1000 வீதம் வழங்கப்பட்டு
வருகிறது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
– கு. பாலமுருகன்







