தமிழ்நாடு அரசின் திட்டங்களை செயல்படுத்தவும் கண்காணிக்கவும் 3 மாவட்டங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் திட்டங்களை முறையாக செயல்படுத்தி பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் அனைத்தும் சென்றடைவதை உறுதி செய்ய பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன்படி 3 மாவட்டங்களில் திட்டங்களை செயல்படுத்தவும் கண்காணிக்கவும் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அர்ச்சனா பட்நாயக், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு நந்தகோபால் , திருப்பூர் மாவட்டத்திற்கு ரீட்டா ஹரிஷ் தாக்கர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள், மாவட்டத்தில் குடிமராமத்து, சாலை மேம்பாடு, ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை கண்காணித்து திட்டங்களை செயல்படுத்துவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.







