“அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர வெறும் 2 ரூபாய் போதும்” – கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு!

2 ரூபாயில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2024- 25ம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு…

2 ரூபாயில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2024- 25ம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மே 5ம் தேதி தொடங்கியது. மேலும், இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்தது.

இதையடுத்து,விண்ணப்பிக்க விரும்புவோர் http://www.tngasa.in என்ற இணையதள முகவரியில் வாயிலாகவும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 6 மணிநிலவரப்படி, இதுவரை 2, 50, 448 மாணவ, மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களில் 1,59,815 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியுள்ளதாக கல்லூரி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் :  புதைக்கப்பட்டு 4 நாட்களுக்கு பின் உயிருடன் வந்த முதியவர்! – எங்கு தெரியுமா?

இந்நிலையில், விண்ணப்பக் கட்டணம் ஒரு மாணவருக்கு ரூ.48 மற்றும் பதிவுக் கட்டணம் ரூ.2 ஆகும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை, பதிவுக் கட்டணம் ரூ. 2 மட்டும் செலுத்த வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து, 2 ரூபாயில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கைக்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

https://x.com/TNDIPRNEWS/status/1791778374978822433?t=7KQ7keXVjkpbiR0RWPcgaA&s=08

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.