நாளை முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை http://www.tnhealth.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
B.Pharm ( Lateral Entry ), B.Sc., Nursing ( Post Basic ), Diploma in Psychiatric ( Post Basic ), Diploma in Nursing ( Women ), இதர டிப்ளமோ & சான்றிதழ் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
சாகர் மித்ரா – ஆட்கள் தேவை
தமிழ்நாட்டில் உள்ள 433 கடலோர கிராமங்களில் PMMSY திட்டத்தின் கீழ், ஒருவருட காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்
http://www.fisheries.tn.gov.in இணையதளத்தில் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மீன்வளத்துறை ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
1,089 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
TNPSC அறிவிப்பு
தமிழ்நாடு அரசில் நில அளவர், வரைவாளர், உதவி வரைவாளர் பதவிகளில் காலியாக உள்ள 1,089 இடங்களை நிரப்புவதற்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் 27-ம் தேதி வரை http://www.tnpsc.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
செப்டம்பர் 1 முதல் 3-ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் அளிக்கப்படும். நவம்பர் 6-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும்.
தேர்வாகும் நபர்களுக்கு ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை ஊதியம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு-தேர்ச்சிப் பட்டியல் வெளியீடு
10 பாடப் பிரிவுகளில் விரிவுரையாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
கணிதம், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், EEE, ECE, மெக்கானிக்கல், சிவில், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட விரிவுரையாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஜூலை 22-ம் தேதி 5 பாடங்களுக்கான தேர்வில் வெற்றி பெற்று தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது 10 பாடங்களில் தேர்வானோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.








