பொறியியல் கல்லூரிகளுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் எச்சரிக்கை.

7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீட் நுழைவுத்தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அரசு மருத்துவக்…

7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீட் நுழைவுத்தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதனால், கடந்த ஆண்டு 400 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக்கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. இதையடுத்து, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் சேர 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு அறிவித்தது. மேலும், இதன்மூலம் பொறியியல் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக்கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டது.

எனினும், சில தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்ததுள்ளது. இதையடுத்து, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் AICTE வழங்கிய அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கட்டணம் வசூலித்திருந்தால், அவற்றை மாணவர்களிடம் உடனடியாக திருப்பி வழங்க வேண்டும் எனவும் பொறியியல் கல்லூரிகளுக்கு, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.