’வெங்கடேஷ் ஐயர், ஸ்டீபன் ஃபிளம்பிங்கின் குளோன் மாதிரி இருக்கார்’: டேவிட் ஹசி கணிப்பு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயர், ஸ்டீபன் ஃபிளம்மிங்கின் குளோன் மாதிரி இருக்கிறார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டேவிட் ஹசி தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்…

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயர், ஸ்டீபன் ஃபிளம்மிங்கின் குளோன் மாதிரி இருக்கிறார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டேவிட் ஹசி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி கலக்கி வருகிறார், வெங்கடேஷ் ஐயர். சென்னையை சேர்ந்த இவர், இந்தூரில் வசித்து வருகிறார்.

அதிரடி ஆட்டக்காரரான வெங்கடேஷின் சிறப்பான பேட்டிங்கால், டெல்லி அணியை நேற்று வென்றது கொல்கத்தா. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் கொல்கத்தா அணியின் பயிற்சியாளருமான டேவிட் ஹசி அவரை புகழ்ந்துள்ளார்.

டேவிட் ஹசி

அவர் கூறும்போது, வெங்கடேஷ் ஐயர், நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளருமான ஸ்டீபன் ஃபிளமிங் கின் குளோன் போல இருக்கிறார். அவர் போலவே இவரும் உயரமானவர். முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடுவதில் அவர் சிறந்த வீரர். அவருக்கு அருமையான எதிர்காலம் இருக்கிறது.  சுப்மன் கில்லும் சிறப்பாகவே செயல்படுகிறார். இருவருமே ஓபனிங்கில் நன்றாக விளையாடி வருகின்றனர் என்றார்.

வெங்கடேஷ் ஐயர், டி-20 உலகக் கோப்பைக்கான அணியில் நெட் பவுலராக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.