மின் கட்டணத்தை உயர்த்தினால்தான் எந்த அரசும் செயல்பட முடியும்-அமைச்சர் துரை முருகன்

மின் கட்டணம், வரி ஆகியவற்றை உயர்த்தினால் தான் எந்த அரசும் செயல்பட முடியும். மற்ற மாநிலங்களில் ஒப்பிடுகையில் தமிழகத்தில் உயர்த்திய மின் கட்டணம் மிக குறைவு  என்று நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன்…

மின் கட்டணம், வரி ஆகியவற்றை உயர்த்தினால் தான் எந்த அரசும் செயல்பட முடியும்.
மற்ற மாநிலங்களில் ஒப்பிடுகையில் தமிழகத்தில் உயர்த்திய மின் கட்டணம் மிக
குறைவு  என்று நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த காசி குட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்
பள்ளியில் மிதிவண்டி வழங்கும் விழாவில் கலந்து கொண்ட தமிழக நீர்வளத் துறை
அமைச்சர் துரை முருகன் மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:
இந்தப் பள்ளியில் மண் தரை உள்ளது. இதனை மாற்றி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உள்ளது. நான் மற்றும் மாறினால் பத்தாது, நீங்களும் மாற வேண்டும்.

நான் பள்ளி படிக்கும்பொழுது தினமும் ரயிலில் பயணம் செய்து காட்பாடி டவுன்
வந்து பள்ளியில் படித்து விட்டு மீண்டும் ரயில் பயணம் செய்து வீடு
திரும்புவேன். தினமும் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் நடப்பேன். 11 முறைக்கு மேல் நான் வெற்றி பெற்ற தொகுதி காட்பாடி தொகுதி. எனவே ஓட்டு போட்டவர்களுக்கும் ஓட்டு போடாதவர்களுக்கும் என்னுடைய தொகுதி பணி தொடரும்.

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் ஊழல் நடைபெற்றதற்கு முழு
காரணம் அதிமுக தான். அவர்கள் ஆட்சி செய்த காலத்தில் தான் ஒப்பந்தம் விடப்பட்டது.
அவர்களை கண்டித்து தான் இன்று பாஜகவினர் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.

மின் கட்டணம், வரி ஆகியவற்றை உயர்த்தினால் தான் எந்த அரசும் செயல்பட முடியும்.
மற்ற மாநிலங்களில் ஒப்பிடுகையில் தமிழகத்தில் உயர்த்தியது மின் கட்டணம் மிக
குறைவு.

எடப்பாடி பழனிச்சாமி இந்தளவுக்கு இறங்கி பேசுவார் என்று நான் கொஞ்சம் கூட
எதிர்பார்க்கவில்லை. பன்னீர் செல்வத்திற்கு திமுக ஆதரவு என்பது முற்றிலுமாக
பொய். வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை ஆய்வு செய்ய
உத்தரவிட்டுள்ளேன்.

வேலூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேலூர் விருகம்பட்டில் இருந்து சித்தூர்
எல்லை வரை சாலை விரிவாக்கம் மற்றும் விருதம்பட்டியில் இருந்து காட்பாடி வரை
மேம்பாலம் வேண்டுமென்று முதலமைச்சரும் கோரிக்கை வைத்துள்ளேன் என்றார் அமைச்சர் துரை முருகன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.