முக்கியச் செய்திகள் சினிமா

பிறந்த நாளில் அடுத்தப் படத்தை அறிவித்தார் அனுஷ்கா

நடிகை அனுஷ்கா ஷெட்டி தனது 40 வது பிறந்த நாளை முன்னிட்டு அடுத்தப் படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர் அனுஷ்கா ஷெட்டி. கடைசியாக ’நிசப்தம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் ஓடிடி-யில் கடந்த ஆண்டு வெளியானது. அதற்கு முன்பே படங்களில் நடிக்காமல் இருந்த அவர், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக செய்தி வெளியானது. தெலுங்கு இயக்குநர் மற்றும் கிரிக்கெட் வீரருடன் இணைத்தும் செய்தி வெளியானது. ஆனால், அதை அனுஷ்கா மறுத்தார். தனது திருமணம் முடிவாகும்போது தானே அறிவிப்பதாகத் தெரிவித்திருந்தார்.

அவர் அடுத்து என்ன படத்தில் நடிக்க இருக்கிறார் என்கிற ஆவல் ரசிகர்களிடையே இருந்தது. ஆனால், எந்த அறிவிப்பும் வரவில்லை. அவருக்கு இன்று 40 வது பிறந்த நாள். இதையடுத்து தனது புதிய படம் பற்றிய அறிவிப்பை அவர், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி, பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படத்தில் அவர் நடிக்கிறார். இந்த நிறுவனம் தயாரித்த மிர்ச்சி, பாகமதி ஆகிய தெலுங்கு படங்களில் அனுஷ்கா ஷெட்டி ஏற்கனவே நடித்துள்ளார்.

இந்தப் புதிய படத்தை ’ரா ரா கிருஷ்ணையா’ என்ற தெலுங்கு படத்தை இயக்கிய மகேஷ்பாபு இயக்குகிறார். இதில் இதுவரை பார்த்திராக கேரக்டரில் அனுஷ்கா நடிக்க இருப்பதாகவும் இதற்காக தனது தோற்றத்தை முற்றிலும் மாற்ற இருப்பதாகவும் தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நான்கு மொழிகளில் உருவாக இருக்கும் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

இயக்குநர் ஷங்கருக்கு எதிராக லைகா மேல்முறையீடு

Jeba Arul Robinson

சென்னையில் சுரங்கப்பாதைகள் மூடல், போக்குவரத்து மாற்றம்

Halley karthi

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லா மாவட்டங்கள் அறிவிப்பு

Gayathri Venkatesan