டி-20 உலகக் கோப்பை: ஆப்கன் வெற்றிபெற இந்திய ரசிகர்கள் பிரார்த்தனை

நியூசிலாந்துக்கு எதிராக இன்று நடக்கும் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற இந்திய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. சூப்பர்-12 சுற்றில்…

நியூசிலாந்துக்கு எதிராக இன்று நடக்கும் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற இந்திய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. சூப்பர்-12 சுற்றில் குரூப்-2- பிரிவில் இன்று 2 லீக் போட்டிகள் நடக்கின்றன. அபுதாபியில் 3.30 மணிக்கு நடக்கும் போட்டியில், நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி பயங்கர எதிர்பார்ப்பில் இருக்கிறது.

இந்தியா, நியூசிலாந்து அணிகளின் அரையிறுதி வாய்ப்பை இந்தப் போட்டிதான் முடிவு செய்ய இருப்பதால்தான் அந்த எதிர்பார்ப்பு. புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அரை இறுதிக்குச் சென்றுவிடும். தோற்றால், இந்திய அணிக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம். இந்திய அணி அடுத்து எதிர்கொள்ளும் நமிபியாவை தோற்கடித்தால் அரை இறுதிக்குள் செல்லலாம். இதனால் இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் வேண்டிக் கொண்டிருக்கின்றனர்.

நியூசிலாந்து அணி, பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக இருக்கிறது. நமிபியாவுக்கு எதிரான நடந்த போட்டியில் அந்த அணியின், பிலிப்ஸ், நீஷம் ஆகியோர் ஆடிய விதம் ஆப்கானிஸ்தானுக்கு கொஞ்சம் எச்சரிக்கையை கொடுத்திருக்கும். ஆப்கானிஸ்தான் அணியின் பெரும் பலமே, சுழல் பந்துவீச்சுதான். பல டாப் பேட்ஸ்மேன்களுக்கே சவால் கொடுக்கும் அந்த அணியின் கட்டுக்கோப்பான சுழலும் பேட்ஸ்மேன்களும் இன்று அதிரடி காட்டினால், ஆப்கன் வெல்ல வாய்ப்பிருக்கிறது. வென்றால், இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பிருக்கிரது.

மற்றொரு போட்டியில், அரையிறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்று விட்ட பாகிஸ்தான் அணி, ஸ்காட்லாந்துடன் மோதுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.