தானும் காதலில் விழுந்ததாகவும் பிறகு அந்த காதல் முறிந்துவிட்டதாகவும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தனுஷ் ஜோடியாக ’கொடி’ படத்தில் நடித்து பிரபலமானவர், மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது அதர்வா ஜோடியாக ’தள்ளிப்போகாதே’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது.
இந்நிலையில், பீகாரில் ஆசிரியர் பணிக்கு தேர்வு எழுதி வெற்றி பெற்ற ரிஷிகேஷ் என்ப வருக்கு பதிலாக அவர் மதிப்பெண் பட்டியலில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் புகைப்படம் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
சமூக வலைதளங்களில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் அனுபமா, இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு சமீபத்தில் பதிலளித்தார். அப்போது அவரிடம் காதல் வயப்பட்டிருக்கிறீர்களா? என்று ரசிகர்கள் கேட்டபோது, தானும் காதலில் விழுந்ததாகவும் ஆனால், அந்த காதல், அப்போதே முறிந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
’மவுனம் சம்மதம்’ படத்தில் மம்மூட்டி, அமலா பாடும் ’கல்யாணத் தேன் நிலா’ என்ற பாடல் தனக்கு எப்போதும் பிடித்தமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.







