நேரடியாக ஓடிடியில் வெளியாகும் அனுபம் கெரின் #Vijay69!

அனுபம் கெர் நடித்துள்ள ‘விஜய் 69’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்ஷய் ராய் இயக்கத்தில் அனுபம் கெர் நடித்துள்ள திரைப்படம் ‘விஜய் 69’. இத்திரைப்படத்தில் சங்கி பாண்டே, மிஹிர்…

அனுபம் கெர் நடித்துள்ள ‘விஜய் 69’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்ஷய் ராய் இயக்கத்தில் அனுபம் கெர் நடித்துள்ள திரைப்படம் ‘விஜய் 69’. இத்திரைப்படத்தில் சங்கி பாண்டே, மிஹிர் அஹூஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை மணீஷ் ஷர்மா தயாரித்துள்ளார். 69-வயதான விஜய் என்பவர் சைக்கிளிங் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெறுவதை அடிப்படையாக கொண்டு இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

கனவுகளை அடைய வயது ஒரு தடையில்லை என்பதை உணர்த்தும் விதமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் வரும் நவம்பர் 8ம் தேதி நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனுபர் கெர் இதுவரை 500க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படம் குறித்து நடிகர் அனுபம் கெர் கூறியதாவது,

“இது ஒரு திரைப்படம் என்பதையும்தாண்டி பேரார்வம், விடாமுயற்சி, அசைக்கமுடியாத நம்பிக்கையை பேசுகிறது. கனவுகளை அடைய வயது ஒரு தடையில்லை என்பதை உணர்த்தும். வாழ்க்கையின் ஒவ்வொரு அத்தியாயமும் புதிய தொடக்கத்துக்கான வாய்ப்பை வழங்குகிறது.”

இவ்வாறு நடிகர் அனுபம் கெர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.