தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் விற்பனை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், காவல்துறை உயர் அதிகாரிகள், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
மேலும், போதைப் பொருட்களை விற்பனை செய்வோரை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்களின் சொத்துக்களை முடக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு முதலமைச்ச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.







