வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு…

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா வருமானத்திற்கு அதிகமாக 16.33 சதவீதம் சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதன் விவரங்களை தற்போது காணலாம்… 2016ஆம் ஆண்டு 3 கோடியே 21 லட்சம் ரூபாய்…

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா வருமானத்திற்கு அதிகமாக 16.33 சதவீதம் சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

அதன் விவரங்களை தற்போது காணலாம்…

2016ஆம் ஆண்டு 3 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 21 சொத்துக்களை சத்யா வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு 16 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 38 சொத்துக்களை சேர்த்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதில் 10 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை கணக்கிட்டு பார்த்ததில்,
2 கோடியே 64 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது அவரது வருமானத்தை விட 16.33 சதவீதம் அதிகமானது என்றும், சத்யாவின் சொத்துக்களின் ஆவணங்களை சார் பதிவாளர் அலுவலகங்கள் மூலம் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.