அண்டார்டிகாவில் அதிகபட்சமான வெப்ப நிலையாக 18.3 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி உள்ளது என்று ஐநாவின் சர்வதேச வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஐநாவின் சர்வதேச வானிலை ஆய்வு மையத்தின் பதிவுப்படி, உலகளவில் அண்டார்டிக்காதான் வேகமாக வெப்பமடைந்து வரும் பகுதியாக இருக்கிறது என்ற தகவலை உறுதி செய்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் அண்டார்டிகாவின் வெப்பநிலையானது 3 டிகிரி செல்ஷியஸ் வரை உயர்ந்துள்ளது. அண்டார்டிகாவில் வெப்பநிலை உயர்வதற்கு காரணம், அங்கு நிலவும் உயர்காற்றழுத்த அமைப்பு ’’ஃபர்ன் தாக்கத்தை’ ( foehn effect) ஏற்படுத்தும். இதனால் பூமியின் மேல்பரப்பு வெப்பமடைகிறது.
ஈரப்பதம் மற்றும் குளிர்தன்மை கொண்ட மலையின் ஒரு பகுதி வெப்பமாகவும், வறட்சியாகவும் மாறுவதே ஃபர்ன் தாக்கம் ஆகும். இதற்கு முன்பாக, மார்ச் 24, 2015ம் ஆண்டு அதிகபட்சமாக 7.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டுதான் அதிகபட்சமான வெப்பநிலை பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







