நம் நாட்டில் உருவாக்கப்பட்ட பிரபல வீடியோ செயலியான ’மோஜ்’, தனது முதல் வருடத்தை நிறைவு செய்துள்ளது.
இந்தியாவின் பிரபல சமூக வலைதளமான ஷேர்ஷாட், கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி, வீடியோ செயலியான மோஜை அறிமுகப்படுத்தியது.
பயனர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு வீடியோக்களை வழங்கவும், படைப்பாளர்கள் புதுமையான உள்ளடக்கங்களை கொண்ட வீடியோக்களை பதிவேற்றவும், இந்த செயலி வாய்ப்பு வழங்கியது. அறிமுகப்படுத்திய சில மாதங்களிலேயே, ஒரு கோடி டவுன்லோடுகளை தாண்டி, புதிய மைக்கல்லை எட்டி ஆச்சரியப்படுத்தியது.

சீன செயலியான டிக்டாக் தடை செய்யப்பட்டதை அடுத்து, மோஜ் செயலிக்கு மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்தது. தற்போது ஒரு வருடத்தை நிறைவு செய்யும் நிலையில், இந்த செயலி ஒரு கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது. இந்த செயலியில் உள்ள இசை நூலகத்தில், 1 லட்சத்து 80 ஆயிரம் பாடல்கள் இடம்பெற்றுள்ளன, என்பது குறிப்பிடத்தக்கது.







