முக்கியச் செய்திகள் குற்றம்

முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டி படுகொலை; தடுக்க வந்த தாய் படுகாயம்

கோவில்பட்டி அருகே உள்ள பாண்டவர்மங்கலத்தில் ஒருவர் வெட்டி படுகொலை தடுக்க வந்த தாயும் படுகாயமடைந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மேல பாண்டவர்மங்கலத்தை சேர்ந்தவர் கனகராஜூ(40). இவர் தனது வீட்டின் அருகே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தபோது, அங்கு பைக்கில் வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல், கனகராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனை பார்த்த அவரது தாய் பார்வதி தடுக்க முயன்றுள்ளார். அதில் பார்வதியும் படுகாயம் அடைந்தார். கனகராஜூ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

படுகாயம் அடைந்த பார்வதி உடனடியாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து கனகராஜூ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முன்விரோதம் காரணமாக இந்த படுகொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கனகராஜூ வீட்டின் அருகே வசிக்கும் பாலமுருகனுக்கும், கனகராஜூக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக பாலமுருகன் கனகராஜை வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என கனகராஜூ உறவினர்கள் போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர். மேலும், கனகராஜூ உறவினர்கள், பாலமுருகன் வீட்டை அடித்து நொறுக்கினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Halley Karthik

தடுப்பூசி தட்டுப்பாடுக்கு பிரதமரின் தவறான கொள்கையே காரணம்: கார்த்தி சிதம்பரம்!

Halley Karthik

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் அறிவிப்பு

G SaravanaKumar