ஒடிசாவில் மழைக்காக சரக்கு ரயிலின் கீழ் ஒதுங்கிய தொழிலாளர்கள் மீது லத்த புயல் காற்றில் நகர்ந்ததால் இஞ்சின் இல்லாத ரயில் ஏறி 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோரில் நடந்த ரயில் விபத்தில் 275க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த துயர சம்பவத்தின் வடுவே இன்னும் ஆறாத நிலையில், அங்கு மற்றொரு ரயில் விபத்து நடந்துள்ளது.
ஒடிசாவின் ஜஜ்பூரில் ரயில்வே பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் சிலர் வேலையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மழை பெய்ததையடுத்து, அங்கு இன்ஜின் இல்லாமல் நின்றிருந்த சரக்கு ரயிலின் கீழ் சில தொழிலாளர்கள் ஒதுங்கி உள்ளனர்.
திடீரென்று வீசிய பலத்த காற்று காரணமாக, எதிர்பாராதவிதமாக சரக்கு ரயில் தானாகவே நகர்ந்துள்ளது. இதில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், அவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.







