சாதி ரீதியாக இழுவுபடுத்தியதாக ககன்தீப் சிங் பேடி மீது ஈரோடு கூடுதல் ஆட்சியர் பரபரப்பு புகார்..!

தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை செயலாளராக உள்ள ககன்தீப் சிங் பேடி மீது  சாதி ரீதியாக  இழுவுபடுத்தியதாக  ஈரோடு கூடுதல் ஆட்சியர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை செயலாளராக உள்ள…

தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை செயலாளராக உள்ள ககன்தீப் சிங் பேடி மீது  சாதி ரீதியாக  இழுவுபடுத்தியதாக  ஈரோடு கூடுதல் ஆட்சியர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை செயலாளராக உள்ள ககன்தீப்சிங் பேடி மீது  சாதி ரீதியாக இழுவுபடுத்தியதாக   ஈரோடு கூடுதல் ஆட்சியர் மணீஸ் நரவனே பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

ஈரோடு கூடுதல் ஆட்சியரான மணீஸ் நரவனே தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளருக்கு ககன்தீப் சிங் பேடி மீது புகார் தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து ” எனது மனசாட்சியின் முடிவை பகிரங்கப்படுத்துகிறேன். இதனால் இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்கும்” என பதிவிட்ட நிலையில் அந்த பதிவை அவர் அழித்துவிட்டார்.

மணீஸ் நரவனே தலைமை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் “ சென்னை மாநகராட்சியில் துணை ஆணையராக இருந்த என்னை, பட்டியலினத்தை சார்ந்தவன் என்பதால் ககன்தீப் சிங் பேடி துன்புறுத்தினார்.

மாநகராட்சி அதிகாரிகள் கூட்டத்தில் வேண்டுமென்றே என்னை திட்டி அவமானப்படுத்தினார். இதனால உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு மன உளைச்சலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றேன்.

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் பிரச்சினையை உருவாக்க ககன்தீப் சிங் பேடி முயற்சி செய்தார். அதேபோல கோப்புகளில் வேண்டுமென்றே கையெழுத்திடாமல் இரவு வரை காத்திருக்க செய்தார் ” என மணீஸ் நரவானே குறிப்பிட்டுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.