வேட்புமனுவை வாபஸ் பெற்று, பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்! இந்தூரில் பரபரப்பு!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அக்சய் பாம் திடீரென பாஜகவில் இணைந்துள்ளார்.  மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டி பாம்,  தனது வேட்புமனுவை…

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அக்சய் பாம் திடீரென பாஜகவில் இணைந்துள்ளார். 

மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டி பாம்,  தனது வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்தார்.  பாஜக வேட்பாளருடன்,  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டி வேட்பு மனுவை திரும்பப் பெற்றார்.

வாக்குப்பதிவிற்கு இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் வேட்பு மனுவை காங்கிரஸ் வேட்பாளர் திரும்பப் பெற்றுள்ளார்.  ஏற்கனவே சூரத்தில்,  அனைத்து வேட்பாளர்களும் வேட்பு மனுவை திரும்பப் பெற்றதால் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வானார்.

தற்போது இந்தூர் தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் மனுவை திரும்ப பெற்றதால், பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகும் சூழல் உருவாகியுள்ளது.  இதற்கிடையே, காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட 2 மாற்று வேட்பாளர்களின் மனுக்களும் ஏற்கெனவே நிராகரிக்கப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.