நடிகர் ஷாருக்கானின் மகன் போதைப்பொருள் விவகாரம்; திடீர் திருப்பம்

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஷாருக்கானின் மகன் கைது செய்யப்பட்ட நிலையில், போதைப்பொருள் வியாபாரியும் சிக்கினார். மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் நடைபெற்ற விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்துவதாக போதைப் பொருள்…

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஷாருக்கானின் மகன் கைது செய்யப்பட்ட நிலையில், போதைப்பொருள் வியாபாரியும் சிக்கினார்.

மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் நடைபெற்ற விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்துவதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், அந்த கப்பலில் சாதாரணப் பயணிகளை போல சென்று கண்காணித்தபோது, தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியதாக எட்டு பேரை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பிடித்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

பிடிபட்ட 8 பேரில், ஒருவரான பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானிடம், 20 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதனையடுத்து ஆர்யன் கான் உள்ளிட்ட மூன்று பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள பந்த்ரா, அந்தேரி, லோகாண்ட்வாலா உள்ளிட்ட பகுதியில் போதைப்பொருள் தடுப்புப் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில், போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் அலுவலகத்தில் அவரிடம், அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.