உலக அழகி ஐஸ்வர்யா ராய் பாரிஸில் உள்ள ஈபிள் டவர் முன்பு ’ராம்ப் வாக்’ செய்யும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
லோரியல் பேரிஸ் நடத்தும் 2021-ம் ஆண்டுக்கான பேரிஸ் பேஷன் வார நிகழ்வில் நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்துகொண்டார்.இந்நிகழ்வில் உலக முழுவதும் உள்ள பிரபல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். முழு நீள வெள்ளை கவுன், பிங்க் நிற லிப் டிக்குடன் மிகவும் அழகாக தோற்றமளித்தார் ஐஸ்வர்யா ராய்.
இந்த ராம்ப் வாக்கில் அவர் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது. சமூகவலைதளத்தில் இந்த புகைப்படங்கள்தான் தற்போது டிரெண்டாகி வருகிறது.









