சமாஜ்வாதி கட்சியின் தலைமையில் ஆட்சி: பகவான், கனவில் வந்து கூறுவதாக அகிலேஷ் யாதவ் பேச்சு!

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைமையில்தான் ஆட்சி அமையும் என பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தினமும் கனவில் வந்து கூறுவதாக முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்தில்…

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைமையில்தான் ஆட்சி அமையும் என பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தினமும் கனவில் வந்து கூறுவதாக முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்தில் அரசியல் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உத்தரப்பிரதேச தேர்தலில் வெற்றி பெற அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், உத்தரப்பிரதேசத்தில் தங்களின் தலைமையில்தான் ஆட்சி அமையும் என பகவான் ஸ்ரீகிருஷ்ணா தினமும் கனவில் வந்து கூறுவதாக தெரிவித்தார்.

மேலும், விவசாயிகளின் வாக்குகளை பெறவே 3 வேளாண் சட்டங்களை மத்திய பாஜக அரசு திரும்பப்பெற்றதாக சாடிய அவர், தங்களின் ஆட்சி அமைத்தவுடன் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும், உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவு சின்னம் கட்டப்படும் எனவும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.