இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2022ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல், இலக்கியம், இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், வேதியியல் முதலிய பிரிவுகளில் சிறந்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு…

2022ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல், இலக்கியம், இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், வேதியியல் முதலிய பிரிவுகளில் சிறந்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வாண்டே பாபோவுக்கு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு ஆலன் ஏஸ்பெக்ட், ஜான் எஃப்.கிளாசர், ஆண்டன் ஜெய்லிங்கர் ஆகிய மூவருக்கு அறிவிக்கப்பட்டது.

நேற்று வேதியியலுக்கான நோபல் பரிசு கரோலின் ஆர் பெர்டோஸி, மோர்டன் மெல்டல் மற்றும் கே பாரி ஷார்ப்லெஸ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘எல் அகுபேஷன்’ (L’occupation) என்ற புத்தகத்தை எழுதியதற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.