விருதுநகரில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ,
மாணவிகளுக்கான மிதிவண்டி போட்டி – 250க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு.
தமிழகமெங்கும் செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா
தமிழக அரசால் மிகச் சிறப்பாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது .அதனை
முன்னிட்டு இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி மாணவ
மாணவிகளுக்கான மிதிவண்டி போட்டி நடைபெற்றது. இதில் மாணவ ,மாணவிகளுக்கு என வயது அடிப்படையில் மூன்று பிரிவில் போட்டிகள் நடைபெற்றது. மிதிவண்டி போட்டியை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்த மிதிவண்டி போட்டி 13 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகள்,15 வயது மற்றும் ,
17 வயது உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கென தனித்தனி போட்டிகள் நடைபெற்றது.10 கிலோ மீட்டர், 15 கிலோ மீட்டர், 20 கிலோமீட்டர் வரையிலான மிதிவண்டி போட்டி வயது அடிப்படையில் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.இந்த மிதிவண்டி போட்டியில் சுமார் 250க்கும் மேற்பட்ட விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த பல்வேறு பகுதியிலிருந்து பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவ மாணவிகளுக்கு செப்டம்பர் 15 ஆம்
தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தில் விருதுநகரில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள தமிழக முதல்வர் அவர்கள் கரங்களால் பரிசுத்தொகையும்,
சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது.







