“தமிழ்நாட்டில் உள்ள பல பேய்களை ஓட்டுவதற்கு தான் இந்த வேதாளம் வந்துருக்கேன்” – ஜெயகுமாருக்கு அண்ணாமலை பதிலடி!

தமிழ்நாட்டில் உள்ள பல பேய்களை ஓட்டுவதற்குதான் இந்த வேதாளம் வந்துருக்கேன் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் பிறந்த நாளை…

தமிழ்நாட்டில் உள்ள பல பேய்களை ஓட்டுவதற்குதான் இந்த வேதாளம் வந்துருக்கேன் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு பாஜக தலைவர்கள் மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த பேசினார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது :

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 2015 ஆம் ஆண்டு, மாவீரன் அழகுமுத்துக்கோனுக்கு தபால் தலை வெளியிட்டுப் புகழ் சேர்த்தது பெருமைக்குரியது.

இதையும் படியுங்கள் : ரிலையன்ஸ் ஊழியர்களுக்கு அம்பானி குடும்பத்தினர் அளித்த திருமணப் பரிசு! என்ன தெரியுமா?

பின்னர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தன்னை வேதாளம் என விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்ததாவது :

தமிழ்நாட்டில் உள்ள பல பேய்களை ஓட்டுவதற்குதான் இந்த வேதாளம் வந்திருக்கிறேன். தமிழ்நாட்டில் பல பேய்கள் இருக்கிறது. இந்த வேதாளம் வந்ததே அந்த பேய்களை ஓட்டத்தான். ஒவ்வொரு பேயாக ஓட்டிக்கொண்டிருக்கிறேன். நிறைய பேய்கள் இருப்பதால் இந்த பேயை முடித்து விட்டு அடுத்த பேய்க்கு வருகிறேன் காத்திருங்கள்”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.