தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை இன்று பொறுப்பேற்கிறார்.
தமிழ்நாடு பாஜக தலைவராக பதவி வகித்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், பாஜக துணைத் தலைவருமான அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை இன்று பதவியேற்கிறார். இதனையொட்டி கோவையில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வாகன யாத்திரையாக புறப்பட்ட அண்ணாமலை, இன்று சென்னை வந்து பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க கமலாலயத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.







