செய்திகள்

நாடு முழுவதும் இன்று 38,949 பேருக்கு கொரோனா பாதிப்பு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 38,949 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. மே மாதம் கொரோனா உச்சத்தில் இருந்த நிலையில் அதன்பிறகு தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது, 3வது அலையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 38,949 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 3,10,26,829 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 542 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். மொத்தம் இதுவரை 4,12,531 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 40,026 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்தம் இதுவரை 3,01,83,876 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் தற்போது 4,30,422 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 39,53,43,767 கொரோனா  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.  நேற்று ஒரு நாளில் 38,78,078 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“56 இன்ச் மோடி ஜி தாளி”; 40 நிமிடத்தில் சாப்பிட்டால் 8.5 லட்சம் பரிசு

EZHILARASAN D

ஒன்றரை வருடத்திற்கு முன்பு நடந்த பிரச்னை,பாஞ்சாகுளத்தில் நடந்தது இதுதான்?-ஆட்சியர் விளக்கம்

Web Editor

கரைவெட்டி பறவைகள் சரணாலயம் கவனிக்கப்படுமா?

Web Editor