சட்டமாமேதை அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு வி.கே.சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை தியாகராய நகரில் வி.கே.சசிகலா தனது இல்லத்தில், அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு, மரியாதை செலுத்தினார். இதையடுத்து பேசிய அவர், ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு பாடுபட்டவர் அண்ணல் அம்பேத்கர் என புகழாரம் சூட்டினார். மேலும், தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.
இதேபோல, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது பிறந்தநாள் விழா சமத்துவ நாளாக தமிழ்நாடு அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு அம்பேத்கர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதேபோல, சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, ஆற்காடு சாலையில் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர். பின்னர் ஓ.பன்னீர்செல்வத்திடம் இந்தி மொழி குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்து பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தமிழ்நாட்டிற்கு ஆங்கிலம் தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என பதிலளித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







