பள்ளி மாணவியின் கோரிக்கையை ஏற்று வரும் 17-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் மதிய உணவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.
சென்னை ஆவடி மற்றும் அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த நரிக்குறவர் இன பள்ளி மாணவிகள் பிரியா, திவ்யா, தர்ஷினி பேசிய வீடியோ கடந்த மாதம் வைரலானது. இதனையடுத்து, மாணவிகளை அழைத்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.
அண்மைச் செய்தி: ‘ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தில் பாமக பங்கேற்பு’
மேலும், நரிக்குறவ மாணவிகளுடனும் அவர்களின் பெற்றோர்களுடனும் வீடியோ அழைப்பில் கலந்துரையாடியபோது, தாம் உங்கள் வீட்டிற்கு வந்தால் சோறு கொடுப்பீர்களா என கேட்டார். அதற்கு, தங்களுக்கு கறி சோறு போடுவதாக மாணவிகள் பதிலளித்தனர்.
அதனையடுத்து, இன்னும் ஒரு வாரத்தில் அவர்களை காண நேரில் வருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். இந்த நிலையில், வரும் 17-ஆம் தேதி நரிக்குறவர் குடியிருப்பு பகுதிக்குச் சென்று மு.க.ஸ்டாலின் உணவருந்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது இந்நிலையில், முதலமைச்சரின் பயணத்தில் மாற்றம் செய்யப்படுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. இதனால், அவர் வேறு ஒரு நாளில் அங்கு செல்வார் என சொல்லப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








