சூரப்பா குறித்த விசாரனை தாமதமாகும்: விசாரணைக் குழு

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டுகளை, விசாரித்து வரும் விசாரணை அதிகாரிகள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், விசாரணை தாமதமாகும் என விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து…

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டுகளை, விசாரித்து வரும் விசாரணை அதிகாரிகள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், விசாரணை தாமதமாகும் என விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து , ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான ஆணையம், விசாரணை நடத்தி வருகிறது. தற்போது வரை 90 சதவிகித விசாரணை நிறைவு பெற்றுள்ள நிலையில், குற்றச்சாட்டுகளை விசாரித்து வரும் விசாரணை குழுவில், பணியாற்றும் சிலருக்கு கொரொனோ தொற்று உறுதியாகியுள்ளது.

இதன் காரணமாக விசாரணையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், சூரப்பா மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சாட்சிகளிடம் நடத்தவுள்ள விசாரணை அடுத்த வாரத்தில் நிறைவு பெறும் எனவும் கலையரசன் தலைமையிலான விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. முழு விசாரணை நிறைவு பெற்ற பின்னரே சூரப்பாவிற்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று விசாரணைக் குழு தெரிவித்துள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.