செய்திகள்

80 கோடி பேருக்கு இலவச உணவு தானியம்; மத்திய அரசு அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள 80 கோடி பேருக்கு தலா 5 கிலோ இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு, நேரக்கட்டுப்பாடு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

பிரதமர் மோடி தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக உயர்மட்ட குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்றைய ஆலோசனை கூட்டத்தின்போது ஆக்சிஜன் தடையின்றி கிடைக்க மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி அதிகாரிகள் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பங்கேற்றார். இந்நிலையில், கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் மே, ஜூன் மாதங்களில் நாடு முழுவதும் உள்ள 80 கோடி பேருக்கு தலா 5 கிலோ இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும். உணவு தானியங்களை வழங்குவதற்காக ரூ.26,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2நாட்கள் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

Niruban Chakkaaravarthi

அதிகரிக்கும் கொரோனா தொற்று; டெல்லியில் பள்ளி, கல்லூரிகள் மூடல்!

Ezhilarasan

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: முதலமைச்சர் அறிவிப்பு

Halley karthi