முக்கியச் செய்திகள் இந்தியா

நெஞ்சுவலி: அண்ணா ஹசாரேவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவுக்கு ஆஞ்சியோகிராபி சிகிச்சை நடந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனே-வை சேர்ந்தவர் சமூக ஆா்வலா் அண்ணா ஹசாரே (84). அங்குள்ள ராலேகான் சித்தி கிராமத்தில் வசித்து வரும் அவர், ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டத்தை வலியுறுத்தி போராட்டத்தை நடத்தியதன் மூலம் நாடு முழுவதும் பிரபலமடைந்தவர். அடிக்கடி உண்ணாவிரதம் இருக்கும் அவர், 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தனது கடைசி உண்ணாவிரதத்தைத் தொடங்க இருப்பதாக அறிவித்திருந்தார்.

இது தொடா்பாக பிரதமா் மோடிக்கும் அவா் கடிதம் எழுதி இருந்தார். பின்னர், மகாராஷ்டிர பாஜக தலைவர், தேவேந்திர ஃபட்னவீஸ், ஹசாரேவை நேரில் சந்தித்து பேசினார். பிறகு தனது கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மத்திய அரசு ஒப்புக்கொண்டதால், உண்ணாவிரதத்தை கைவிடுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து புனே உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று (வியாழக்கிழமை) ஆஞ்சியோகிராபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் உடல்நிலை இப்போது சீராக இருப்பதாகவும் இன்னும் சில நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

அல்லு அர்ஜுனுக்கு 160 வருட பழமையான துப்பாக்கியை பரிசளித்த தொழிலதிபர்

Halley karthi

70-வது பிறந்தநாள் கொண்டாடிய மாமனாருக்கு 70 வகை உணவு

புதுச்சேரியில் இன்று 2 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா; நெருக்கடியில் நாராயணசாமி அரசு!

Gayathri Venkatesan