ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் – ஜூலை 7ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை!

ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கு ஜூலை 7 ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டம் அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோவிலின் உபகோயிலான சிறியமலை அருள்மிகு யோக ஆஞ்சநேய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த நிலையில் ஆஞ்சநேயர் கோயில் குடமுழக்கு விழா வரும் ஜூலை 7 ம் தேதி நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் ஜூலை 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார். மேலும் அதனை ஈடுசெய்யும் வகையில் 19-07-2025 (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.