இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவின் ‘அனிமல்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் 2017இல் வெளியான அர்ஜுன் ரெட்டி எனும் தெலுங்கு படத்தினை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வங்கா. இந்தப் படம் விமர்சனரீதியாக மட்டுமல்லாமல் நல்ல வசூலையும் பெற்றது. இந்தப்படம் தமிழ், ஹிந்தியில் ரீமெக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த இயக்குநரின் அனிமல் படத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ளார். இதில் ராஷ்மிகா ‘கீதாஞ்சலி’ எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநரின் சொந்தத் தயாரிப்பான பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவு அமித் ராய்.
மேலும், பிரபல சன்னி தியோலின் சகோதரான பாபி தியோல் படத்தின் வில்லனாக நடித்துள்ளார். சூர்யாவின் கங்குவா படத்திலும் பாபி தியோல் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து, சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட் மாஸ்டராக கலக்கி இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ரன்பீர் கபூரின் பிறந்த நாளான செப்டம்பர் 28 ஆம் தேதி படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரில் ரன்பீரின் தோற்றம் மட்டும் மாறுபட்ட நடிப்பால், இப்படம் ரன்பீர் கபூருக்குத் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், படத்தின் டீசர் கவனம் பெற்ற நிலையில் டிரைலர் வரும் நவம்பர் 23ஆம் தேதி வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து, தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளிலும் பான் இந்தியப் படமாக உலகம் முழுவதும் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.