“அனிமல் திரைப்படம் சர்வதேச தரத்தில் உள்ளது” – நடிகர் நானி பாராட்டு!

அனிமல் திரைப்படம் சர்வதேச தரத்தில் உள்ளதாக பிரபல தெலுங்கு நடிகர் நானி தனது X தளத்தில் பாராட்டியுள்ளார். அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ள…

அனிமல் திரைப்படம் சர்வதேச தரத்தில் உள்ளதாக பிரபல தெலுங்கு நடிகர் நானி தனது X தளத்தில் பாராட்டியுள்ளார்.

அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ள அனிமல் திரைப்படம் நேற்று (டிச.1) தெலுங்கு,  தமிழ்,  ஹிந்தி,  மலையாளம்,  கன்னடம் என 5 மொழிகளிலும் வெளியானது.

பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர்,  ராஷ்மிகா நடித்துள்ள இந்தப் படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் அளித்திருந்தது.  3 மணி நேரம் 21 நிமிடங்கள் நீளம் கொண்ட இந்த படத்தில் வன்முறை காட்சிகள் ரத்தம் தெறிக்க காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  அப்பா மகனுக்கிடையில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ள இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில்,  பிரபல தெலுங்கு நடிகர் நானி அனிமல் திரைப்படம் குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“அனிமல் திரைப்படம் சர்வதேச தரத்தில் உள்ளது. இயக்குநர் சந்தீப் வங்கா ஒரு மேட் ஜீனியஸ்.  ரன்பீர், ராஷ்மிகா மற்றும் படக்குழுவினருக்கு நான் தலை வணங்குகிறேன்”.

இவ்வாறு நானி தனது கருத்துகளை X தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அனிமல் படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ.116 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/NameisNani/status/1730690679842677163

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.