ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா சென்னை அப்போலோவில் அனுமதி

ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரங்களுடன் கதாநாயகியாக நடித்து பிரபலமான நடிகை ரோஜா, முதலில் தெலுங்கு தேசம் கட்சியில்…

ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரங்களுடன் கதாநாயகியாக நடித்து பிரபலமான நடிகை ரோஜா, முதலில் தெலுங்கு தேசம் கட்சியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கி பிறகு ஒய்.எஸ்.ஆர் காங்கிரசில் ஐக்கியமானார். கடந்த 2 முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வான அவருக்கு சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை, இளைஞர் நலத்துறை அமைச்சராக்கப்பட்டார்.

அமைச்சரான பிறகு கட்சி பணிகளில் சுற்றி சுழன்று வரும் ரோஜா அடுத்த ஆண்டு வரவுள்ள மக்களவை தேர்தல் தொடர்பாக கட்சி பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு கடுமையான கால்வலி ஏற்பட்டதால் கடந்த 10 நாட்களாக எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்துள்ளார். பிறகு வலி அதிகரிக்கவே ஆந்திராவில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறார்.

ரோஜாவுக்கு கால் வலி மேலும் அதிகரிக்கவே இன்று அதிகாலை சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரோஜாவுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது என மருத்துவமனை தரப்பிலோ, அமைச்சர் ரோஜா சார்பிலோ எந்த தகவலும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.