“வந்துட்டேனு சொல்லு, தலைவர பாக்க வந்துட்டேனு சொல்லு!” – ரஜினியை சந்தித்த பின் ஆஸ்திரேலிய தூதர் ட்வீட்!

வந்துட்டேனு சொல்லு, தலைவர பாக்க வந்துட்டேனு சொல்லு! என ரஜினியை சந்தித்த பின் தென்னிந்தியாவிற்கான ஆஸ்திரேலிய தூதர் சாரா கிர்லேவ் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் ரஜினிகாந்த். இவர் தற்போது…

வந்துட்டேனு சொல்லு, தலைவர பாக்க வந்துட்டேனு சொல்லு! என ரஜினியை சந்தித்த பின் தென்னிந்தியாவிற்கான ஆஸ்திரேலிய தூதர் சாரா கிர்லேவ் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ’ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, விநாயகன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இதன் இசைவெளியீட்டு விழா வருகிற ஜூலை மாத இறுதியில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. இந்த படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினியின் 169-வது படமான ’ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/AusCGChennai/status/1667490005562916867

இந்நிலையில், தென்னிந்தியாவிற்கான ஆஸ்திரேலிய தூதர் சாரா கிர்லேவ், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சாரா, ”வந்துட்டேனு சொல்லு, தலைவர பாக்க வந்துட்டேனு சொல்லு!” என குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் ஜெயிலர் திரைப்படத்திற்காக காத்திருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.