ஆந்திரப்பிரதேச மாநிலம், நந்திகாமா பகுதியைச் சேர்ந்த தோனி ரசிகர்கள் 77 அடி உயர கட்-அவுட்டை வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2020 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வுபெற்ற தோனி, தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்தியாவுக்காக மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டுமே. இவரது தலைமையின் கீழ் கடந்த 2007ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்றது. அதனை தொடர்ந்து 2011 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013 ஐசிசி சாம்பியன் டிராபியை இந்திய அணி வென்றது.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்த தோனி இந்திய அணியில் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன், வெற்றிகரமான கேப்டன் என அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக வலம் வந்தார். எந்தவித கடினமான நிலைமையிலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாக முடிவெடுப்பதால் ரசிகர்கள் இவரை ‘கூல் கேப்டன்’ என அழைக்கிறார்கள். 2007 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை கேப்டனாக இருந்தார்.
இவரது தலைமையில் தான் 2009 ஆம் ஆண்டு டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்தது. டி20, 50 ஓவர், சாம்பியஸ் டிராஃபி என 3 கோப்பைகளையும் வென்ற கேப்டன் என்ற பெருமைக்கு தோனி மட்டுமே சொந்தக்காரர். 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்தார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் 42 வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய ரசிகர்கள் ஆந்திர மாநிலம் நந்தி காம அருகே அம்பர் பேட்டை கிராமத்தில் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினர். மேலும், அவருடைய ரசிகர்கள் சுமார் 65 ஆயிரம் ரூபாய் செலவில் தோனியின் 77 அடி உயர கட்டவுட்டை நந்தி காம கிராமத்தில் அமைத்தனர்.தொடர்ந்து தோனியின் பிறந்தநாள் கொண்டாட்டம் அங்கு நடைபெற்றது.








