ஆக்சிஜன் குறைபாடால் 11 பேர் உயிரிழப்பு: ரூ.10 லட்சம் நிவாரணம்!

திருப்பதி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம்…

திருப்பதி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று இரவு ஆக்சிஜன் குறைபாடு காரணமாக 11 பேர் உயிரிழந்தனர். இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், இச்சம்பவம் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஆக்சிஜன் குறைபாடு காரணமாக உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனக் கூறியுள்ள அவர், இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, அனைத்து மருத்துவமனைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.