முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் விளையாட்டு

தமிழ்நாடு வாள் வீச்சு வீராங்கனை மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வாள்வீச்சில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவிக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இங்கிலாந்தில் நடைபெற்று வந்த காமன்வெல்த் போட்டிகள் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. தொடர்ந்து தற்போது லண்டனில் காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

இதில் வாள்வீச்சு இறுதிபோட்டியில் சீனியர் பெண்கள் சேபர் பிரிவில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை பவானி தேவி, ஆஸ்திரேலிய வீராங்கனை வஸ்லேவாவை எதிர்கொண்டு வெற்றி பெற்றார். ஆஸ்திரேலிய வீராங்கனை வஸ்லேவாவை 15-க்கு 10 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தமிழ்நாடு வீராங்கனை பவானிதேவி தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

 

அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பவானி தேவி மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அன்புமணிராமதாஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், லண்டனின் நடைபெற்று வரும் காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டிகளின் கத்திச் சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ள சென்னையைச் சேர்ந்த இந்திய வீராங்கனை பவானி தேவிக்கு எனது பாராட்டுகள் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் வாள் வீச்சில் மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகள்! என தெரிவித்துள்ளார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனா உறுதியான நபருடன் தொடர்பு: 2 வது டெஸ்ட்டில் இருந்து ஆஸி. கேப்டன் விலகல்

EZHILARASAN D

ஜம்மு-காஷ்மீரில் 40 நிமிடத்தில் 2 முறை நிலநடுக்கம்

Web Editor

வாலி திரைப்பட ரீமேக் வழக்கு-எஸ்.ஜே.சூர்யா மனு தள்ளபடி

G SaravanaKumar