டி20 கிரிக்கெட்டில் 600 ஆட்டங்கள் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பொல்லார்டு.
இவர் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பதவி வகித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் ஹண்ட்ரடு கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில், லண்டன் ஸ்பிரிட் அணிக்காக பொல்லார்டு விளையாடினார்.
அண்மையில் நடைபெற்ற ஆட்டம் ஒன்று அவருக்கு 600வது ஆட்டமாகும். பல கிளப் அணிகளுக்காக பொல்லார்டு டி20 ஆட்டங்களில் விளையாடி வருகிறார். இந்தியாவில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார்.
600 ஆவது டி20 ஆட்டங்களில் விளையாடி சாதனை படைத்த பொல்லார்டுக்கு சக கிரிக்கெட் வீரர்களும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இவருக்கு அடுத்தபடியாக டுவைன் பிராவோ 543 டி20 ஆட்டங்களில் விளையாடியிருக்கிறார். அவரும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆவார். பாகிஸ்தான் வீரர் ஷோயாப் மாலிக் 472 ஆட்டங்களிலும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் 463 ஆட்டங்களிலும் இங்கிலாந்து வீரர் ரவி போபரா 426 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளனர்.








