நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு அன்புமணி இரங்கல்!

நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு அன்புமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகை சௌகார் ஜானகி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் வசித்து வந்த சௌகார் ஜானகி உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலமானார். இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்பட நடிகை சௌகார் ஜானகி அம்மையார் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.

1952-ஆம் ஆண்டில் திரையுலகில் அறிமுகமாகி எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் தொடங்கி தமிழ்த் திரையுலகின் அனைத்து நடிகர்களுடனும் நடித்தவர். ஏராளமான விருதுகளை வென்றவர்.

நடிகை சௌகார் ஜானகி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.