ராதிகா மெர்ச்சண்டின் பேச்சிலர் பார்ட்டியில் ஜான்வி கபூர்! – இணையத்தில் வைரலாகும் புகைபடம்!

ராதிகா மெர்ச்சண்டின் பேச்சிலர் பார்ட்டியில் நடிகை ஜான்வி கபூர் கலந்து கொண்ட  புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை…

ராதிகா மெர்ச்சண்டின் பேச்சிலர் பார்ட்டியில் நடிகை ஜான்வி கபூர் கலந்து கொண்ட  புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு குஜராத்தின் ஜாம்நகரில் மார்ச் 1 முதல் 3 ஆம் தேதி வரை திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வில்,  இந்திய பிரபலங்கள் மட்டுமின்றி,  வெளிநாடுகளில் இருந்தும் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.  இந்த நிகழ்ச்சியில் ராதிகா மெர்ச்சண்டுக்கு தோழியான நடிகை ஜான்வி கபூர் கலந்து கொண்டார்.

இதையும் படியுங்கள் : டெஸ்லா நிறுவனம் இந்தியா மீது ஆர்வம் காட்ட காரணம் இதுதான்.. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் விளக்கம்!

இந்நிலையில்,  தற்போது ராதிகா மெர்ச்சண்டு தோழிகள் ஒன்று சேர்ந்து பேச்சிலர் பார்ட்டி ஒன்றை நடத்தினார்.  இந்த பேச்சிலர் பார்ட்டியில் ராதிகா மெர்ச்சண்டு தோழியான நடிகை ஜான்வி கபூர் கலந்துகொண்டார்.  இந்த பேச்சிலர் பார்ட்டியின் கருப்பு பொருள்  இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தது.  இது தொடர்பான புகைபடத்தை ஜான்வி கபூர் தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  நடிகை ஜான்வி கபூர் தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ள புகைபடம் தற்பொது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.