ஆப்கானிஸ்தானில் பெண்கள் பல்கலைக்கழகங்களில் பயில் தடை விதித்து விதித்து அந்நாட்டு அரசு அதிரடியாக உத்தரவு போட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். தாலிபான்களின் ஆட்சி அமைத்து ஓராண்டுகளில் பெண்களுக்கு எதிரான பல அடக்குமுறைகள் தலைதூக்கியுள்ளது. அதிலும் பெண்கள் கல்வி பயிலப் பல தடைகளை விதித்து வந்தனர்.
கடந்த மார்ச் மாதம் 5-ம் வகுப்புகளுக்கு மேல் மாணவிகள் கல்வி பயிலத் தடை விதித்து உத்தரவிட்டனர். தாலிபான்களின் உத்தரவின்படி மகளிருக்கான நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் ஆப்கானில் பெண் கல்வியில் சீர்குலைவு ஏற்பட்டது.
அதற்காகப் பல உலக நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்த நிலையில் ஆப்கானில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆனால் தற்போது மீண்டும் ஆப்கானில் பெண்களுக்கு எதிராகக் கல்வி ஒடுக்குமுறை தலை தூக்கியுள்ளது, மீண்டும் ஆப்கானில் அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி பயிலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மறு அறிவிப்பு வரும் வரை மாணவிகள் கல்லூரிக்குள் நுழையக்கூடாது என ஆப்கானிஸ்தான் உயர்கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.








