கிணற்றில் விழுந்து தத்தளித்த யானை; பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

கிணற்றில் விழுந்த குட்டியானையை நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் பங்காரு பாலம் பகுதியில் உள்ள காண்ட்லா பல்லே கிராமத்தில் உள்ள கிணறு ஒன்றில் நள்ளிரவில்…

கிணற்றில் விழுந்த குட்டியானையை நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் பங்காரு பாலம் பகுதியில் உள்ள காண்ட்லா பல்லே கிராமத்தில் உள்ள கிணறு ஒன்றில் நள்ளிரவில் யானை குட்டி ஒன்று தவறுதலாக விழுந்துள்ளது. இரவு முழுவதும் கிணற்றில் தவித்துக்கொண்டிருந்த யானை குட்டியை, கிராம மக்கள் காலையில் கண்டுபிடித்துள்ளனர்.

பின்னர், கிராம மக்கள் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் யானையை மீட்பதற்கு பல வகைகளில் நீண்ட நேரமாக முயற்சி செய்தும் பலன் அளிக்காததால், அவர்கள் வேறு வழியை யோசித்தனர்.

பின்னர் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் கிணற்றின் ஒரு பக்கத்தை உடைத்து யானை மேலே ஏறி வருவதற்கு வழி ஏற்படுத்தினர். ஜேசிபி இயந்திரம் மூலம் கிணற்றின் சுவர் இடிக்கப்பட்டது. பின்னர், தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த யானை குட்டி, பத்திரமாக மீட்கப்பட்டது. மேலே வந்த யானைக்குட்டி அருகில் இருந்த வனப்பகுதிக்குள் ஓடிச்சென்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.