செந்தில்பாலாஜி வாய் திறந்தால் திமுக ஆட்சிக்கு ஆபத்து என எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருச்சி துவாக்குடியில் உள்ள BHEL தொழிற்பேட்டை வளாகத்தில் அதிமுகவின் அண்ணா
தொழிற்ச்சங்கம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி ஆரின் வெங்கலத்தால் ஆன
திருவுருவ சிலையை தமிழக சட்டபேரவை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி
திறந்து வைத்தார்.
BHEL வளாகத்தில் பணியாற்றி வரும் 800 அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த
உறுப்பினர்களால் சுமார் 10 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட திருவுருவ சிலை
திறப்பு விழா அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் நடைபெற்றது –
இதில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து
கொண்டனர்.
சிலையை திறந்து வைத்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி பின்னர்
பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியதாவது:
இந்தியாவிலேயே தமிழகம் முதன்மையான மாநிலமாக மாற உழைத்தவர் எம்.ஜி.ஆர். அதிமுகவில் மட்டும் தான் ஒரு தொண்டன் உச்ச பதவிக்கு வர முடியும். அதிமுகவில் உழைத்தால் ஏதோ ஒரு பதவி கதவை தட்டி தருவார்கள் – ஆனால் திமுகவில்
பணம் இருந்தால் மட்டும் தான் பதவி,பொறுப்பு கிடைக்கும். அதிமுகவை உடைக்க பார்க்கின்றனர் – இதனை உடைக்க முடியாது – தொட்டு கூட பார்க்கமுடியாது.
எவ்வளவோ அவதாரம் எடுத்தார் ஸ்டாலின் ஆனால் ஒன்றும் செய்ய முடியாது. நமக்கு எதிராக பி.டீம் ஒன்றை ஸ்டாலின் உருவாக்கியார். ஒ.பி.எஸ் மற்றும் வைத்தியலிங்கம் திருச்சியில் மாநாடு நடத்தினார்கள் – ஆனால் அதை விட இங்கு கூட்டம் அலை மோதுகிறது. எதிர் கட்சி ஒன்று இணைந்து மத்தியில் புதிய ஆட்சியை ஸ்டாலின் ஏற்படுத்த
போகிறாராம் – தமிழகத்திலே அவருக்கு வரவேற்பு இல்லை. அமலாக்க துறை, வருமான வரித்துறை பார்த்து திமுகவில் உள்ள பல மந்திரிகளுக்கு தூக்கம் போச்சு.
அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனைக்கு சென்ற போது அமைச்சரவையே சென்றது. செந்தில் பாலாஜி மட்டும் வாய் திறந்தால் – ஸ்டாலின்
இருப்பது கோட்டை அல்ல – எந்த ஜெயில் என்பது ப.குமார் சொல்லி விட்டார். நிதி அமைச்சர் 30 ஆயிரம் கோடி சம்பாதித்தாக கூறி விட்டார். செந்தில் பாலாஜி வாய் திறந்தால் இந்த ஆட்சி கோவிந்தா! ஆரோக்கியத்திற்காக அல்ல – ஆட்சியை காப்பாற்ற தான் செந்தில் பாலாஜியை பார்த்து கொள்கின்றனர்.
தக்காளி உள்ளிட பல்வேறு காய்கறிகள் விலை உயர்வு – முதலமைச்சருக்கு என்ன ?
கோர்ட் சூட் போட்டு போட்டோ எடுத்து விட்டு வீட்டிற்கு செல்லும் ஸ்டாலினுக்கு
என்ன கவலை ? ஸ்டாலின் தொட்டு பார் – தொட்டு பார் என்கிறார் – இதோ தொட்டு விட்டார்கள் அல்லவா.
எப்போதும் நீட்டை பற்றி மட்டுமே பேசினார்கள் – இன்னும் நீட்டுக்கு கையெழுத்து
போட ஸ்டாலினுக்கு நேரமில்லை போல. மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும் – இப்போது கேட்டாலே ஷாக் அடிக்கிறது. போதை பொருள் இல்லாத இடமே இல்லை – சட்டம் ஒழுங்கு இங்கே சந்தி சிரிக்கின்றது. இதை கண்டுகொள்ளாத அரசாக திமுக அரசு உள்ளது.
இன்று சென்னையில் வெடி குண்டு போட்டுள்ளனர் – கள்ளச்சாராயத்தால் எவ்வளவு
உயிரிழப்புகள். திமுக நிர்வாகிகளிடம் தற்போது காவல் துறை கைக்கட்டி நிற்கிறது – போலி மது பானம், கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும். கடைமடை பகுதிக்கு இது வரை நீர் செல்லவில்லை. காவிரி மேலான்மை வாரியம் கூறியும் கர்நாடகா தண்ணீர் தர முடியாது என்கின்றனர். கூட்டணி கூட்டணி என்கிறீர்களே? ஏன் குரல் கொடுக்கவில்லை,
தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் பேசினாரா ? இல்லை,அவர் பேச மாட்டார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.







