இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் நடைபெற்ற இருசக்கர வாகன பந்தயத்தின் போது நேரிட்ட விபத்தில் 13 வயது சிறுவன் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் மெட்ராஸ் ரேஸ் டிராக் என்ற பெயரில் ரேஸ் கிளப் இயங்கி வருகிறது.
இதில் 17 வயதுக்குட்பட்டோருக்கான இளம் பந்தய வீரர்கள் பங்கேற்கும் TVS ONEMAKE சேம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
இதில் பெங்களூரை சேர்ந்த ஹரிஸ் என்ற 13 வயது சிறுவன் நிலைதடுமாறி கீழே விழுந்து மயக்கமடைந்து உயிரிழந்தார். இந்நிலையில் இந்த விபத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.







