வரத்து அதிகரிப்பால் தமிழ்நாட்டில் குறைந்து வரும் தக்காளி விலை; மக்கள் மகிழ்ச்சி!

வரத்து அதிகரிப்பால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தக்காளி விலை குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சில்லறை விற்பனையில் தக்காளியின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு…

வரத்து அதிகரிப்பால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தக்காளி விலை குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சில்லறை விற்பனையில் தக்காளியின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய் வரை விற்பனையான நிலையில், கடந்த 31ஆம் தேதி வரலாறு காணாத அளவிற்கு புதிய உச்சமாக 210 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

கடந்த இரு நாட்களாக சென்னையில் தக்காளியின் விலை குறைய தொடங்கிய நிலையில், வரத்து அதிகரிப்பால் கோயம்பேடு காய்கறி சந்தையில் சில்லரை விலையில் ஒரு கிலோ தக்காளி 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. நவீன் ரக தக்காளி 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று, மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி, தற்போது வரத்து அதிகரித்ததால் விலை குறைந்து 1 கிலோ 80 லிருந்து 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி உழவர் மற்றும் காய்கறி சந்தையில் இரண்டு மாதங்களுக்கு பின்பு தக்காளி விலை கிலோ 70 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தக்காளி விலை குறைந்து காணப்படுவதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் அதிகளவில் தக்காளியை வாங்கி சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.