கெளதம் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘ஆகஸ்ட் 16, 1947’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குனர் முருகதாஸ் தயாரிப்பில் கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஆகஸ் 16, 1947. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார். அறிமுக நாயகியாக ரேவதி நடித்துள்ளார். பல சின்னத்திரை பிரபலங்கள் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் டிரைலர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
அண்மைச் செய்தி: ‘பட்ஜெட்டை படித்து பார்க்காமல் எடப்பாடி பழனிசாமி கருத்துக் கூறியுள்ளார்’ – செந்தில் பாலாஜி விமர்சனம்
சுதந்திர போராட்ட காலத்தில் ஆங்கிலேயே படைகளை எதிர்த்து களமாடிய ஒருவரின் கதையாக உருவாகி வரும் இந்தப் படம் வருகிற ஏப்ரல் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.







