திருவள்ளூர் அருகே அமோனியம் வாயுக்கசிவு – 7 பேர் உயிரிழப்பு!

திருவள்ளூர் அருகே அமோனியம் வாயுக்கசிவு ஏற்பட்டு இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தனியார் நிறுவனத்தில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் மூச்சு விட முடியாமல் திணறினர். மேலும் சிலருக்கு வாய், மூக்கில் ரத்தம் கசிந்ததால் பெரும் அவதிக்குள்ளாகினர். இதில் 20-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்த நிலையில், எட்டு பேர் ஊயிருக்கு ஆபத்தான நிலையில் அவதிக்குள்ளாகினர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி ஆறு பேர் உயிரிழந்துள்ள நிலையில் 70-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் செங்குன்றத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, இருவரை கைது செய்து காவல்துறை விசாரித்து வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.